ADDED : அக் 11, 2024 12:35 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அளவில், பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் (அப்ரன்டிஸ்) சேர்க்கை முகாம், தாராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.
காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறும் முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான தொழில் பழகுநர் காலியிடங்களை நிரப்ப உள்ளன.
முகாமில் பங்கேற்று தேர்ச்சி பெறுவோருக்கு, தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்று பெற்றவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
எட்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 முடித்த தகுதியுள்ளவர்கள், உரிய ஒரிஜினல் ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94990 55695, 99447 39810, 94990 55700 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம்.