/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்' உரிமையாளர் மீது வழக்கு 90 மது பாட்டில்கள் பறிமுதல்
/
'பார்' உரிமையாளர் மீது வழக்கு 90 மது பாட்டில்கள் பறிமுதல்
'பார்' உரிமையாளர் மீது வழக்கு 90 மது பாட்டில்கள் பறிமுதல்
'பார்' உரிமையாளர் மீது வழக்கு 90 மது பாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஜன 18, 2024 01:42 AM
அவிநாசி : திருவள்ளுவர் தினத்தில் சட்டவிரோதமாக 'டாஸ்மாக்' மதுக்கடை 'பாரில்' மது விற்பனையில் ஈடுபட்டு வந்த பார் உரிமையாளர் மற்றும் விற்பனை செய்த நபர்கள் மீது மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவிநாசி, கோவை ரோடு, கால்நடை மருத்துவமனை எதிரிலுள்ள 'டாஸ்மாக்' கடை எண்:1923-ல், உள்ள பாரில் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கடை எண்: 1511-ல் உள்ள 'பாரிலும், திருவள்ளுவர் தினமான நேற்று முன்தினம் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையறிந்து, 'பார்' உரிமையாளர்களான விமல்ராஜ், முத்துராஜா மற்றும் விற்பனையாளர்கள் ஜெயசீலன், வெங்கடேஷ்குமார் ஆகியோர் மீது அவிநாசி மதுவிலக்கு போலீசார் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி வழக்கு பதிவு செய்தார். இரண்டு கடைகளிலும், 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.