/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., நிர்வாகி உட்பட 8 பேர் மீது வழக்கு
/
தி.மு.க., நிர்வாகி உட்பட 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2025 12:24 AM
பல்லடம்,; பல்லடம் அருகே இரு தரப்பினர் மத்தியில் ஏற்பட்ட மோதல் குறித்து, தி.மு.க., நிர்வாகி உட்பட எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சுல்தான்பேட்டை வட்டாரத்துக்குட்பட்ட மலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் 46; தி.மு.க.,வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர். இப்பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ், 42, தனது மனைவியுடன் தேவராஜ் தகாத உறவு வைத்திருந்ததாக சந்தேகித்தார்.
இது தொடர்பாக, செல்வராஜ் மற்றும் தேவராஜ் தரப்பினரிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. விசாரணை மேற்கொண்ட சுல்தான்பேட்டை போலீசார், செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், தேவராஜ், சுரேஷ்குமார், பிரபு, நந்தகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் மீது, 7 பிரிவுகளின் கீழும், தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில், செல்வராஜ், மணிமேகலை, ஈஸ்வரன் ஆகியோர் மீது, 3 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.