sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

/

துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபரை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 19, 2011 12:12 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : வனப்பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் சுற்றியது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனசரகத்தில், சந்தனக்கட்டை, மற்றும் அரிய வகை கிழங்குகள் கடத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் கடத்தலை முழுமையாக தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 16 ம் தேதி காமனூத்து பகுதியில் மாடுகளை தேடிச்சென்ற கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த மாரியப்பன்(29) என்பவரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது.காயமடைந்த மாரியப்பனுக்கு உடுமலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மாரியப்பனை சுட்டு விட்டு தப்பியோடி கும்பலை கண்டுபிடிக்க சம்பவத்தன்று மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், உடுமலை டி.எஸ்.பி., செந்தில் தலைமையிலான குழுவினர் வனப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.போலீஸ் தரப்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், மர்ம கும்பல் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் சுற்றி வருவது வனம் மற்றும் விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை காட்டுகிறது.



எனவே உடனடியாக இரண்டு வனசரகங்களிலும் போலீஸ் மற்றும் வனத்துறை சார்பில் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து எவ்வித அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.இதனால், மலைவாழ் மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. வனத்திலிருந்து சந்தனக்கட்டை மற்றும் இதர பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க உடனடியாக தேடுதல் பணிகளை வனத்துறை மற்றும் போலீஸ் இணைந்து நடத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us