தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டமைப்பு வசதியற்ற கால்நடை சந்தை

 கட்டமைப்பு வசதியற்ற கால்நடை சந்தை

 கட்டமைப்பு வசதியற்ற கால்நடை சந்தை


ADDED : ஜன 16, 2026 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:''அமராவதிபாளையம் கால்நடைச்சந்தையில் கட்டமைப்பு வசதிகள் இல்லை'' என்று வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையம், தாராபுரம் - கோவை ரோட்டில் உள்ள குண்டடத்தில் கால்நடைச்சந்தை பாரம்பரியமாக நடந்து வருகிறது. வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை அமராவதிபாளையத்திலும், சனிக்கிழமை குண்டடத்திலும் சந்தை நடக்கிறது. இரு சந்தைகளிலும் கால்நடை வரத்து, ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

மாடுகளை, வாங்கவும் விற்கவும், 2,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். 1.50 - 1.80 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. வளரும் தொழில் நகராக திருப்பூர் மாறி வரும் நிலையில், மாவட்டத்தில் பொங்கலுார், காங்கயம், தாராபுரம், உடுமலை சுற்றுவட்டார பகுதியில், விவசாயம் நடைபெறுவதால் மாடு வளர்ப்பு தொடர்கிறது. மாவட்டத்தின் பிற பகுதியை விட, காங்கயத்தில் தான் அதிகளவில் காளை, பசு, கன்றுக்குட்டிகள் வளர்க்கப்படுகின்றன.

மாட்டுச்சந்தை வியாபாரிகள் கூறுகையில், ''திருப்பூர் மட்டுமின்றி, சேலம், மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகின்றனர். நள்ளிரவு முதலே வாகனங்கள் வருகின்றன. பலரும் திரள்கின்றனர். இயற்கை உபாதையைத் தவிர்க்க அமராவதிபாளையம் மாட்டுச்சந்தையில் எந்த வசதியும் இல்லை. வெளியூரில் இருந்து வருபவர்கள் சங்கடமான சூழலில் சந்தைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்'' என்றனர்.

ஏமாறும் விவசாயிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சந்தைகளில் காளை, பசுக்களை விட, கன்றுக்குட்டிகளே அதிகம் வாங்கப்படுகிறது; விற்கப்படுகிறது. மழை பெய்யும் நாட்களில், பசும்புல் வளர்ச்சியை எதிர்பார்த்து, கன்றுக்குட்டிகளை சந்தைக்கு கொண்டு வருவது குறைந்தாலும், பெரும்பாலான நாட்களில் கன்றுக்குட்டி அதிகளவு கொண்டு வரப்படுகிறது. வரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. கால்நடைச்சந்தையில், கன்றுக்குட்டிகளுக்கென தனியிடம் ஒதுக்க வேண்டும். அன்றைய விலை நிலவரம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளும் வியாபாரிகளிடம் விவசாயிகள் பலர் ஏமாந்து போகின்றனர். கன்றுக்குட்டி, மாடு, பசு, விலை நிலவரம் குறித்து, விவசாயிகள் அறிந்து கொள்ளும் வழிகளை வேளாண் துறையினர் ஏற்படுத்த வேண்டும். - விவசாயிகள்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us