ADDED : மார் 11, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்: பொங்கலுாரில், சுங்கச்சாவடி போராட்ட குழு மற்றும் பொங்கலுார் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், எட்டு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்கத்தை, அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, பொங்கலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கண்காணிக்க முடியும். எஸ்.ஐ. சந்திரன், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் விஸ்வநாதன், கொ.ம.தே.க., மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், சுங்கச்சாவடி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
