/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளின் நுாற்றாண்டு விழா; மாவட்ட அளவில் இன்று துவக்கம்
/
அரசு பள்ளிகளின் நுாற்றாண்டு விழா; மாவட்ட அளவில் இன்று துவக்கம்
அரசு பள்ளிகளின் நுாற்றாண்டு விழா; மாவட்ட அளவில் இன்று துவக்கம்
அரசு பள்ளிகளின் நுாற்றாண்டு விழா; மாவட்ட அளவில் இன்று துவக்கம்
ADDED : ஜன 22, 2025 08:05 PM
உடுமலை; மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் நடத்தப்படும் நுாற்றாண்டு விழா, இன்று முதல் துவங்குகிறது.
நுாறு ஆண்டுகளை கடந்த அரசு பள்ளிகளை பெருமைப்படுத்தும் வகையில், நுாற்றாண்டு திருவிழா, மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் கொண்டாடப்படுகிறது.
மாநில அளவில் துவக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட அளவில் நுாற்றாண்டுகளை கடந்த, குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இன்று (23ம் தேதி) முதல் பிப்., 2ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
மாவட்ட அளவில் நடக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பள்ளி அளவில் ஆண்டு விழாவின் போது முன்னாள் மாணவர்கள், பெற்றோர் இணைந்து நுாற்றாண்டு விழாவும் கொண்டாடுவதற்கு, கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தலைமையாசிரியர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், மாணவர்கள் என பள்ளி சார்ந்த பங்கேற்பாளர்களை கொண்டு விழா ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும்.
விழாவின் தேதி, சிறப்பு விருந்தினர்கள் விபரம், நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்களின் பங்கேற்பு உள்ளிட்ட செயல்பாடுகளை குழுவாக இணைந்து முடிவு செய்ய வேண்டும்.
விழாக்குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளியைச்சேர்ந்த அனைவருக்கும், நுாற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து தெரியப்படுத்துவதும், வரவேற்கவும் வேண்டும்.
விழாவுக்கு முன்பாகவே எதிர்பார்க்கப்படும் பங்கேற்பாளர்களின் பட்டியலை, தயாராக வைக்க வேண்டும். விழாவில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த திட்டமிடுதல் வேண்டும்.
விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை மரியாதை செய்ய வேண்டும்.
பள்ளியில் நடந்த நிகழ்வுகள், பள்ளி மற்றும் மாணவர்கள் பெற்ற விருதுகள், அரசு மற்றும் பள்ளியின் முன்னெடுப்புகள் குறித்து காட்சிபடுத்துதல் அவசியம்.
நுாற்றாண்டு விழா கணக்குகளை, பள்ளிகல்வி இணையதளத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
மேலும் பள்ளியின் அனைத்து பங்கேற்பாளர்களையும் நுாற்றாண்டு உறுதிமொழி எடுக்க வைத்தல், நுாற்றாண்டு திருவிழா குறித்து புகைப்படம் அல்லது வீடியோ வாயிலாக, ஆவணப்படுத்துதல் உள்ளிட்ட வழிமுறைகள் கல்வித்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.