ADDED : ஜூன் 15, 2026 08:14 AM
உடுமலை: உடுமலை, பழநி ரோட்டில் கொழுமம் ரோடு பிரிவு முதல், நகர எல்லை வரை மையத்தடுப்புகள் அமைத்தால், விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
உடுமலை, பழநி ரோட்டில், கொழுமம் ரோடு பிரிவு முதல், வெஞ்சமடை வாய்க்கால் பாலம் வரை, பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளதோடு, இரு புறமும் அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன.
தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், ரோட்டை கடந்து பள்ளிகளுக்கு செல்லும் நிலையில், இந்த ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது.
மேலும், குடியிருப்புகளிலிருந்து பிரதான ரோட்டிற்கு வரும் வாகனங்களும் விபத்துக்குள்ளாகின்றன. எனவே, இந்த ரோட்டில், கொழுமம் ரோடு பிரிவு முதல், நகர எல்லை வரை, மையத்தடுப்புகள் அமைக்கவும், பள்ளி, கல்லுாரிகள் முன், வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
