sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்;  மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர் 

/

பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்;  மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர் 

பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்;  மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர் 

பிப். 1ல் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்;  மகிழ்ச்சி 'பொங்குமா?' புதிய திட்டங்களை எதிர்நோக்கும் திருப்பூர் 


ADDED : ஜன 14, 2026 06:30 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மத்திய பட்ஜெட், வரும் பிப்., 1 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதால், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தங்களது பிரதான கோரிக்கையை சமர்ப்பித்து வருகின்றனர். திருப்பூர் பனியன் தொழில் என்பது, சுயம்புவாக வளர்ந்த விருட்சம் என்று, மூத்த தொழில்துறையினர் கூறுவர். வேர்விட்டு வளரும் வரை, சுய முயற்சியால் தொழில்துறையினர் வளர்த்தனர். அதன்பின், ஒவ்வொரு சவால்களை எதிர்கொண்ட போதுதான், மத்திய, மாநில அரசுகளின் உதவி தேவைப்பட்டது; அன்னிய செலாவணியை ஈட்டித்தந்த தொழில் என்பதால், அரசுகளும் தங்கள் பங்கிற்கு தாராளமாக உதவி செய்தன.

உள்நாட்டு சந்தையில் பெரிய சவால்கள் ஏற்படுவதில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தில், வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட்டு, போட்டிநாடுகளின் கடும் போட்டியை சமாளித்த வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சிறிய நாடுகளும் நம்மைவிட பலம் வாய்ந்த சந்தைகள் ஏராளமாக உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, வங்கதேசம் கடும் போட்டியை உருவாக்கி வருகிறது.

இவ்வாறு, சர்வதேச சந்தைகளில் உருவாகும் போட்டியை எதிர்கொள்ள, மத்திய அரசின் உதவி கட்டாயமாகிறது. ஒவ்வொரு ஆண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன், தொழில்துறையினரின் கருத்துக்களை அரசு கேட்டு பெறுகிறது. தொழில் அமைப்பினர், தங்களது கோரிக்கையை கடிதமாகவும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், 2026 - 27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், வரும் பிப். 1ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்ய இரண்டு வாரம் மட்டுமே இருப்பதால், தொழில் அமைப்பினர், தங்களது கோரிக்கையை அரசுக்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, 'ஏ-டப்' என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்தை கட்டாயம் நீட்டிக்க வேண்டுமென, கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

நிவாரண திட்டம் வேண்டும் ---------------------- சட்டசபை தேர்தல் நெருங்குவதால், தமிழகத்துக்கான அறிவிப்புகள், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மின் கட்டண உயர்வால், குறு, சிறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 'ஏ-டப்' திட்டம், பசுமை மின் உற்பத்தி திட்டம், தொழிலாளர் குடியிருப்பு திட்டம், அமெரிக்க வரிவிதிப்புக்கு சரியான நிவாரணம் வழங்கும் திட்டம் என, திருப்பூர் பனியன் தொழில்துறையினர் பயன்பெறும் வகையிலான திட்டம் இடம்பெற வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பு. - பின்னலாடை தொழில்துறையினர்








      Dinamalar
      Follow us