/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசு காப்பீடு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு
/
மத்திய அரசு காப்பீடு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு
மத்திய அரசு காப்பீடு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு
மத்திய அரசு காப்பீடு திட்டம்: மாணவியர் விழிப்புணர்வு
ADDED : ஜன 08, 2024 11:16 PM
உடுமலை;உடுமலை, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியின் சார்பில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போடிபட்டி ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியின் வணிகவியல் துறை சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து, வணிகவியல் துறை பேராசிரியர் பிருந்தாதேவி, ராஜபிரியா, உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இத்திட்டத்தில் இணைந்த பின், எவ்வாறு பயன்படுத்துவது, எந்தெந்த மையங்களில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 600 பேருக்கு இத்திட்டத்துக்கான அட்டை பெறுவதற்கு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. ஊராட்சி பிரதிநிதிகள், கல்லுாரி மாணவியர் இந்நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.