தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு


ADDED : மார் 05, 2024 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்;லோக்சபா தேர்தல் அமைதியாக நடக்கவும், வாக்காளர்கள் எவ்வித அச்சம் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகாமல், சுதந்திரமாக ஓட்டுப்போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய, ஐந்து லோக்சபா தொகுதி கள் அடங்கியுள்ளன. விரை வில், தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக, போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், 90 பேர் சில நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தனர். அவர்கள் வேலம்பாளையம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொடி அணி வகுப்பு


தேர்தல் அமைதியாக நடக்கவும், வாக்காளர்கள் எவ்வித அச்சம் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகாமல், சுதந்திரமாக ஓட்டுப்போட ஏற்பாடு செய்யும் வகையில், பாதுகாப்பு படையினர், போலீசார் பங்கேற்ற கொடி அணி வகுப்பு திருப்பூர் பி.என்., ரோடு போயம்பாளையத்தில் துவங்கி பிச்சம்பாளையம், ஸ்ரீநகர் வழியாக அவிநாசி கவுண்டம்பாளையத்தில் நிறைவு பெற்றது. இதில், அனுப்பர்பாளையம் உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் லதா, ஜெகநாதன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us