/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சென்சுரி' பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் வெற்றி
/
'சென்சுரி' பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் வெற்றி
ADDED : ஆக 06, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, திருப்பூர்தெற்கு குறுமைய அளவிலான சிலம்பம் போட்டி, நிப்ட்- டீ கல்லுாரியில் நடந்தது.இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து, மாணவ, மாணவியர் பங்கேற்று, விளையாடினர்.
இதில், திருப்பூர் சென்சுரி பள்ளி, 7ம் வகுப்பு மாணவி சிவானி,ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டியில், இரண்டாமிடம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளார்.
மாணவியையும், பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் சக்திவேல், முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும்ஆசிரியர்கள் வாழ்த்தினர்.