ADDED : செப் 27, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அரங்கத்தில், கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் மூத்தோரை கவுரவிக்கும் விழா நடந்தது.
இவ்விழா, தேவாங்கர் சமூக நல மன்றம், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்தது. விழாவை தேவாங்கர் சமூக நல மன்ற இணை செயலாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
செயலாளர் திருமலைசாமி வரவேற்றார். தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். விழாவில், 75 வயது நிறைவடைந்த மூத்தோர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தேவங்கார் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கல்வி உதவி தொகையை வழங்கினர். பின்னர் நடந்த மகாசபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
