/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீச்சல் பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ்
/
நீச்சல் பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ்
ADDED : ஜூன் 01, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோடு, குளத்துபாளையம் கொங்கு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாணவ, மாணவியருக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கிளப் செயலாளர் ராஜூ தலைமையில் நடந்தது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் லட்சுமணன் 335 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
கொங்கு ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் வேலுசாமி, கோவிந்த், நீச்சல் பயிற்சியாளர்கள் மோகன் மற்றும் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.