/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதை பரிசோதனை நிலையத்தில் சான்றளிப்பு இயக்குனர் ஆய்வு
/
விதை பரிசோதனை நிலையத்தில் சான்றளிப்பு இயக்குனர் ஆய்வு
விதை பரிசோதனை நிலையத்தில் சான்றளிப்பு இயக்குனர் ஆய்வு
விதை பரிசோதனை நிலையத்தில் சான்றளிப்பு இயக்குனர் ஆய்வு
ADDED : ஜன 23, 2025 11:26 PM
- - நமது நிருபர் -
பல்லடம் விதை பரிசோதனை நிலையத்தில், உயிர்மச் சான்றளிப்பு இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை -திருச்சி ரோடு, திருநகர் காலனியில் விதை பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு இணை இயக்குனர் தபேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். ஜன., 2025 வரையிலான சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகளின் இலக்கு மற்றும் சாதனை விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வு முடிவுகள் குறித்த காலத்தில் விதை உற்பத்தியாளர், விதை விற்பனையாளர் மற்றும் விவசாயிகளுக்கு சென்றடைகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். ஆண்டு இலக்கை முழுமையாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். என்.ஏ.டி.பி., திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து இயந்திரங்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து செயல் விளக்கத்துடன் உறுதி செய்தார்.
விதைகள் முளைப்புத்திறன் அறையில் பராமரிக்கப்பட வேண்டிய தட்பவெப்ப நிலை, ஈரப்பதம் மற்றும் வெளிச்சத்தின் அளவு சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
விதை மாதிரிகள் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறைகளை கையாண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, விதை பரிசோதனை அலுவலர் நர்கீஸ், கோவை மற்றும் திருப்பூர் விதை சான்று உதவி இயக்குனர்கள் மாரிமுத்து, மணிகண்டன், வேளாண் அலுவலர்கள் வளர்மதி, கிருஷ்ணப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

