/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தாண்டுவதற்காக சவால்கள்; தாங்குவதற்காக சங்கடங்கள்'
/
'தாண்டுவதற்காக சவால்கள்; தாங்குவதற்காக சங்கடங்கள்'
'தாண்டுவதற்காக சவால்கள்; தாங்குவதற்காக சங்கடங்கள்'
'தாண்டுவதற்காக சவால்கள்; தாங்குவதற்காக சங்கடங்கள்'
ADDED : அக் 19, 2024 12:40 AM

திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் என்.எஸ்.எஸ்., அமைப்பு இணைந்து, போலீசாரின் 'குற்றம் இல்லா நிலை' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கல்லுாரி அரங்கில் நடத்தின. கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கே.வி.ஆர்., நகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் பேசியதாவது:
கல்லுாரி வயது என்பது, சமூகத்துடன் இணைந்து பழகும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். பிரச்னைகள், சவால்கள், சங்கடங்கள் நிறைய வரும்; அதை தாங்க வேண்டும்; தாண்ட வேண்டும்; சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்; அப்போது வாழ்க்கை இனிக்கும்.சமூக ஊடகங்களில் தனிப்பட்ட புகைப்படம், குடும்ப புகைப்படங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை 'மார்பிங்' செய்து, தவறான செயலுக்கு பயன்படுத்தும் 'சைபர்' குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. நமது தனிப்பட்ட புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் மற்றும் செயல்பாடுகள் நமக்கானவை; அதை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வு வர வேண்டும்.பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவிகளை கண்டிக்கின்றனர் என்றால், அது உங்களின் எதிர்கால நன்மைக்கானது என்பதை உணர வேண்டும். சமூக ஊடகங்களுக்கு வந்த பின், சிறுமிகள் பலர் பாலியல் குற்றங்களுக்கு ஆளாகின்றனர்; அந்த சிறுமியும், அவரது குடும்பத்தினரும் படும் மன உளைச்சல் சொல்லி மாளாது. சிறுமிகள், மாணவியர் பாதுகாப்பு கருதி, 'டெடிகேட்டிவ் பீட்' எனப்படும் ரோந்து துவக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் துவங்கி, கல்லுாரி வரை இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தி, 'டெடிகேட்டிவ் பீட்' அமைத்து, சரக வாரியாக அழைப்பு எண்கள் வழங்கப்பட இருக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.---
2 படங்கள் பேசுபவர் படத்தை கட் செய்து வைக்கவும். மாணவியர் படங்கள் முழுமையாக இடம்பெறச்செய்யவும்
---------
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்த போலீசாரின் 'குற்றம் இல்லா நிலை' திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உதவி போலீஸ் கமிஷனர் நாகராஜன் பேசினார்.
இதில் பங்கேற்ற மாணவியர்.