/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்
/
வீடு தேடி ரேஷன் பொருள் வினியோக நாளில் மாற்றம்
ADDED : அக் 02, 2025 08:39 PM
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், இம்மாதம் வீடு தேடி ரேஷன்பொருள் வினியோக நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு 'தாயுமானவர் திட்டத்தில்' ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும் முறையை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இம்மாதத்தில், பொருட்கள் வழங்கும் நாளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில், மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டு வந்தது.
இம்மாதத்தில், வரும் 5ம் தேதி (ஞாயிறு), 6ம் தேதி (திங்கள்) ஆகிய இரண்டு நாட்கள், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.