ADDED : மார் 03, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
உடுமலை: சரிவில் இருந்து மீண்டு மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழைக்கு மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த மாதம், அறுவடை பணிகள் துவங்கியது. அப்போது, நுாறு கிலோ மூட்டைக்கு, 2 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைத்தது. அறுவடை தீவிரமடைந்ததும், விலை சரிந்தது. மூட்டை 1,700 ரூபாய் அளவுக்கு விலை குறைந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மக்காச்சோளத்தின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. நேற்று உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மக்காச்சோளம் மூட்டை ரூ. 1,820க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
ஒரு மூட்டைக்கு, 2,200 ரூபாய்க்கு அதிகமாக விலை கிடைத்தால் மட்டுமே, நஷ்டம் தவிர்க்கப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
