ADDED : பிப் 08, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில், வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் பணி நடக்கிறது. இதனால், வரும், 11, 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இத்தேதிகளில் மயிலாடுதுறை - சேலம் ரயில் (எண்:16811) வீரராக்கியம் ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக சேலத்துக்கு பதிலாக கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயில் புறப்படும்.