/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய தினசரி மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் சொன்ன மாற்றங்கள்
/
புதிய தினசரி மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் சொன்ன மாற்றங்கள்
புதிய தினசரி மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் சொன்ன மாற்றங்கள்
புதிய தினசரி மார்க்கெட் வளாகம் வியாபாரிகள் சொன்ன மாற்றங்கள்
ADDED : டிச 31, 2024 06:52 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் பயன்பாட்டுக்கு ஏற்ப சில மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை மாநகராட்சி பொறியியல் பிரிவினர் மார்க்கெட் வளாகத்தில் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கமுத்து, ரவிக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். வியாபாரிகள் தரப்பில், வளாகத்தில் முன் நுழைவாயில் மாற்றம், வாகன பார்க்கிங்குக்கு கூடுதல் இடம், காமராஜ் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளுக்கு வழி, நுாலக கட்டடம் பகுதியில் ஒரு நுழைவுப் பகுதி அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, பொன்னம்மாள் மருத்துவமனை ரோட்டை நோக்கிய கடைகள் அமைத்தல் உள்ளிட்ட 11 மாற்றங்கள் குறிப்பிடப்பட்டது. அவற்றை குறிப்பெடுத்துக் கொண்ட அலுவலர்கள், நிர்வாகத்தில் இதற்கான அனுமதி பெற்று அவற்றை செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.