/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வி
/
பாத்திர தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வி
ADDED : பிப் 20, 2026 04:22 AM

அனுப்பர்பாளையம்: -: பாத்திர தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பள உயர்வை தொழிற்சங்கத்தினர் கோரினர்; எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் தரப்பில் 5 சதவீதம் உயர்த்தி தர மட்டுமே ஒப்புக்கொண்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிச. 31 உடன் காலாவதியானது. புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று காலை அனுப்பர்பாளையம் எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
உற்பத்தியாளர் சங்க தரப்பில், தலைவர் துரைசாமி, செயலாளர் தர்மமூர்த்தி, பொருளாளர் ராஜேந்திரன்; தொழிற்சங்க தரப்பில், வேலுச்சாமி (எல்.பி.எப்.), குப்புசாமி (சி.ஐ.டி.யு.), குணசேகரன் (ஏ.டி.பி.), நாகராஜன் (ஏ.ஐ.டி.யு.சி.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.), பூபதி (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூனன் (காமாட்சி அம்மன் சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.
தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில், 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏற்க மறுத்து 'ஐந்து சதவீதமே கூடுதலாக தர முடியும்' என்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
வரும் 23ம் தேதி தொழிலாளர் துறை உதவி கமிஷனர் பிரேமா, தலைமையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கம் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

