/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்
/
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூர்த்தம் - ஆயக்கால் நடல்
ADDED : மார் 16, 2024 12:09 AM

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, பிப்., 27ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள வாக்கு பிள்ளையார் கோவில் சகுனம் கேட்டல், நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவில், நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, தேர் முகூர்த்தம், ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் மிராசுதாரர்கள், பக்தர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரும், 20ம் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் கொடியேற்றம் நடக்கிறது.
வரும், 24ம் தேதி மஞ்சள் நீராடல், வசந்தம் பொங்கல் வைத்தல், 25ம் தேதி காலை குண்டம் திறந்து பூப்போடுதல், 26ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அதே தினம், மாலை 3:30 மணிக்கு திரு தேர் வீதி உலா வருதல், 30ம் தேதி மஞ்சள் நீர் தரிசனம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.