தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேரோட்டம் கோலாகலம்: அவிநாசியில் பக்தர்கள் சங்கமம்

தேரோட்டம் கோலாகலம்: அவிநாசியில் பக்தர்கள் சங்கமம்

தேரோட்டம் கோலாகலம்: அவிநாசியில் பக்தர்கள் சங்கமம்


ADDED : ஏப் 27, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாகலமாகத் துவங்குகிறது.

கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்குகிறது. ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் எழுந்தருள, 'அரோகரா', 'நமச்சிவாய' முழக்கங்கள் விண்ணைப் பிளக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.

இன்று வடக்கு ரத வீதியில் இருந்து புறப்படும் தேர், மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட உள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க டி.எஸ்.பி. கனகசபாபதி தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க ரத வீதிகளில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட உள்ளது. தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

தேரோட்ட நிகழ்ச்சிகள் (29ம் தேதி): பெரிய தேர் நிலை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (30ம் தேதி): அம்மன் தேர் மற்றும் சுப்ரமணியர், பெருமாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளன.

மே 1: பரிவேட்டை.

மே 2: இரவு தெப்பத்தேர் உற்சவம்

மே 3: நடராஜப் பெருமான் தரிசனம்,கொடியிறக்கம்.

மே 4: மஞ்சள் நீர், மயில் வாகனக் காட்சியுடன்தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us