/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறநிலையத்துறை மானிய கோரிக்கை; கோவில் பணியாளர் - பூசாரிகள் எதிர்பார்ப்பு
/
அறநிலையத்துறை மானிய கோரிக்கை; கோவில் பணியாளர் - பூசாரிகள் எதிர்பார்ப்பு
அறநிலையத்துறை மானிய கோரிக்கை; கோவில் பணியாளர் - பூசாரிகள் எதிர்பார்ப்பு
அறநிலையத்துறை மானிய கோரிக்கை; கோவில் பணியாளர் - பூசாரிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 15, 2025 11:41 PM
பல்லடம்; அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறுமா? என, கோவில் பணியாளர்கள், பூசாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழக சட்டசபையில், நாளை ஹிந்து அறநிலையத்துறை சார்பிலான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளன. இதில், நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைபெறுமா? என, கோவில் பூசாரிகள், பணியாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இது குறித்து, கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு கூறுகையில், ''பூசாரிகள் நல வாரியம், மாதாந்திர ஊக்கத்தொகை உயர்வு, வருமான உச்சவரம்பு உயர்வு, இலவச இருசக்கர வாகனம் வழங்குதல், வழிபாட்டு பயிற்சி உட்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்துள்ளோம்.
நாளை நடக்கவுள்ள அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், இதில் சிலவற்றை தமிழக அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
கோவில் பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கோவை, திருப்பூர், கரூர் உட்பட மாவட்டங்களில், இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர், துப்புரவு பணியாளர் என, 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்ட பின்னும், பணியிடத்துக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை.
நீண்ட நாட்களாக, பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஏற்கனவே உள்ள பணியாளர்கள் விடுப்பு எடுக்காமல் கூடுதல் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்தி வருவதால், வேலைப்பளு அதிகரித்துள்ளது.
அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

