/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமியில் பட்டய கணக்காளர் தினம்
/
ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமியில் பட்டய கணக்காளர் தினம்
ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமியில் பட்டய கணக்காளர் தினம்
ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமியில் பட்டய கணக்காளர் தினம்
ADDED : ஜூலை 04, 2025 12:47 AM

திருப்பூர்; திருப்பூர் மத்திய (பழைய) பஸ் ஸ்டாண்ட் அருகில் இயங்கி வரும், ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில், 77வது பட்டய கணக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, அகாடமி முதன்மை செயல் இயக்குனர் அருணாசலம் வரவேற்றார். திருப்பூர், பட்டய கணக்காளர் சங்க பைனான்சியர் லிட்ரசி கமிட்டி மற்றும் இன்வெஸ்டர் அவெர்னஸ் கமிட்டி தலைவர் அருள்ஜோதி, பங்கேற்று பேசுகையில், ''நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில், ஆடிட்டர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது,'' என்றார். பின், வருமான வரி, ஜி.எஸ்.டி., குறித்து விளக்கமளித்தார். மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தினார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி, வினாடி வினா, பேச்சுப் போட்டி ஆகியவை நடந்தது; பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சி.ஏ., தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அகாடமி தாளாளர் சுதாராணி, நன்றி கூறினார்.