/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டய கணக்காளர் நிறுவன விழா; திருப்பூர் கிளைக்கு சிறப்பு விருது
/
பட்டய கணக்காளர் நிறுவன விழா; திருப்பூர் கிளைக்கு சிறப்பு விருது
பட்டய கணக்காளர் நிறுவன விழா; திருப்பூர் கிளைக்கு சிறப்பு விருது
பட்டய கணக்காளர் நிறுவன விழா; திருப்பூர் கிளைக்கு சிறப்பு விருது
ADDED : பிப் 05, 2025 12:33 AM

திருப்பூர்; இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் திருப்பூர் கிளைக்கு, அகில இந்திய அளவில் சிறந்த கிளை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம், நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும், 16க்கும் அதிகமான கிளைகளை கொண்ட இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின், 75வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கடந்த, 2ம் தேதி புதுடில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜகதீன் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில், 750 உறுப்பினர்களை கொண்ட திருப்பூர் கிளைக்கு, அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வழங்கிய விருதை, திருப்பூர் கிளை தலைவர் செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து கிளை தலைவர் செந்தில்குமார் கூறுகையில்,''அகில இந்திய அளவில், திருப்பூர் கிளைக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கிளை வளர்ச்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகள், பட்டய கணக்காளர்கள், மாணவர்கள், கவுன்சில் உறுப்பினர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்,'' என்றார்.