sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துரத்தும் நாய்கள்... 'மிரட்டும்' இருள்

/

துரத்தும் நாய்கள்... 'மிரட்டும்' இருள்

துரத்தும் நாய்கள்... 'மிரட்டும்' இருள்

துரத்தும் நாய்கள்... 'மிரட்டும்' இருள்


ADDED : டிச 01, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கால்வாய் அடைப்பு

வீரபாண்டி, குப்பாண்டம்பாளையத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது. கால்வாய் சுத்தம் செய்ய வேண்டும்.

- கோகுல், வீரபாண்டி.

தெருநாய்த் தொல்லை

திருப்பூர், பி.என்., ரோடு, மும்மூர்த்தி நகர், டாக்டர்ஸ் காலனியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.

- பாண்டியன், மும்மூர்த்தி நகர்.

திருப்பூர், பெரியார் காலனி, ஏ.பி.டி., லே-அவுட் முதல் வீதியில் தெருநாய்த்தொல்லை அதிகமாகி வருகிறது. பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் சாலையில் நடக்கின்றனர்.

- ஆராதனா, ஏ.பி.டி., லே-அவுட்.

வீணாகும் தண்ணீர்

திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- விஜி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)

மழைநீர் தேக்கம்

திருப்பூர், காலேஜ் ரோடு, அணைப்பாளையம், அப்போலோ அகரம் ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சென்று வர முடியவில்லை. மழைநீரை அகற்ற வேண்டும்.

- செல்வராஜ், அணைப்பாளையம். (படம் உண்டு)

திருப்பூர், 54வது வார்டு, ஏ.பி., நகர் கிழக்கு, நொச்சிபாளையம் ரோட்டில் மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி இல்லை. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்குகிறது.

- அஸ்வின், ஏ.பி., நகர். (படம் உண்டு)

சுகாதாரச் சீர்கேடு

அவிநாசி, செம்பியநல்லுார் ஊராட்சி, சத்தி செல்லும் மெயின் ரோட்டில், பழனிசாமி முத்தம்மாள் கல்யாண மண்டப ஸ்டாப் அருகே குப்பை அள்ளாமல் அப்படியே தேங்கியுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ஜெயக்குமார், செம்பியநல்லுார். (படம் உண்டு)

திருப்பூர், 15 வேலம்பாளையம், சொர்ணபுரி என்கிளேவ் பகுதியில் ரோட்டோரம் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். வழிநெடுகிலும் குப்பை தேங்கியுள்ளது.

- அஜய் அரவிந்த், சொர்ணபுரி என்கிளேவ். (படம் உண்டு)

திருப்பூர், கே.பி.என்., காலனி எக்ஸ்டன்சன் பகுதியில் குப்பைகள் வாங்க மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. குப்பைகள் தேக்கமடைகின்றன.

- சுப்பு, கே.பி.என்., காலனி.

எரியாத விளக்குகள்

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலத்தில், பத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எப்போதும் எரிவதில்லை. இருள்சூழ்ந்தே காணப்படுகிறது. புகார் தெரிவித்தும் நடவடிக்கையே இல்லை.

- ஷாலினி, அணைக்காடு. (படம் உண்டு)

திருப்பூர், 55வது வார்டு, கோபால் நகர் நான்காவது வீதியில், தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.

- யஷிகா, கோபால் நகர்.

வாகனங்கள் தடுமாற்றம்

திருப்பூர், 23வது வார்டு, கோல்டன் நகர் ரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். நடுரோட்டில் உள்ள குழியால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

- சங்கர்சதீஷ், கோல்டன் நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

சீரானது உடைப்பு

திருப்பூர், 49வது வார்டு, காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதும், குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டுள்ளது.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)

ரோடு அமைப்பு

திருப்பூர், தென்னம்பாளையம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வீதியில், ரோடு போட ஜல்லி கொட்டி பணி துவங்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதாக, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது, தார் ரோடு போட்டுள்ளனர்.

- செல்வராஜ், தென்னம்பாளையம். (படம் உண்டு)






      Dinamalar
      Follow us