/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துரத்தும் தெரு நாய்கள்; அலறும் பொதுமக்கள்
/
துரத்தும் தெரு நாய்கள்; அலறும் பொதுமக்கள்
ADDED : நவ 20, 2024 10:13 PM

உடுமலை ; உடுமலை நகர பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருகின்றன. இவை, ரோட்டில் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடித்து வருகிறது.
கடந்த இரு நாட்களில், எஸ்.என்.ஆர்., நகர் பகுதியில், ஆறு பேரையும், ஒட்டுக்குளம் பகுதியில் விவசாய தொழிலாளர்கள், 10க்கும் மேற்பட்டோரையும், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், பலரையும் கடித்து, குதறியுள்ளது.
உடுமலை அரசு மருத்துவமனைக்கு, தினமும், 15க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்காக சிகிச்சைக்கு வருகின்றனர்.
மேலும், குடியிருப்பு பகுதிகளில், கூட்டம், கூட்டமாக சுற்றி வரும் தெரு நாய்கள், பொதுமக்கள், குழந்தைகளை குறி வைத்து கடித்து வருவதோடு, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களையும் கடித்து வருகின்றன. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், விபத்துக்களும் அதிகரித்துள்ளது. அதே போல், நகரை ஒட்டியுள்ள பெரியகோட்டை, போடிபட்டி, சின்னவீரம்பட்டி பகுதிகளில், பொதுமக்கள் மட்டுமின்றி, ஆடு, மாடுகளையும் கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, உடுமலை நகரம் மற்றும் அருகிலுள்ள ஊராட்சி பகுதிகளில், தெரு நாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.