தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீட்டு பத்திரம் மீது கடன் பெற்று மோசடி ?

வீட்டு பத்திரம் மீது கடன் பெற்று மோசடி ?

வீட்டு பத்திரம் மீது கடன் பெற்று மோசடி ?


UPDATED : ஆக 29, 2026 07:38 PM

ADDED : ஆக 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 07:38 PM ADDED : ஆக 29, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்குளி:திருப்பூர் விஜயாபுரம், மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணையன், 66 என்பவர், ஊத்துக்குளி போலீசில் அளித்த புகாரில், வீட்டு பத்திரத்தைப் பெற்ற ஒருவர் ரூ.5 லட்சம் கடன் வழங்கியதாகவும், அதே பத்திரத்தை திருப்பூர் வீட்டு வசதி சங்கத்தில் அடகு வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். கடன் தொகை தனது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, பின்னர் முழுத் தொகையும் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், ரூ.5 லட்சம் கடனுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் தவணை செலுத்தியும் கடன் முடியவில்லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்ணையன் மற்றும் அம்பேத்கர் சட்ட முன்னணி பொது செயலாளர் பிரபாகரன் கூறியதாவது: இதுபோல் 20 பேர் வரை இந்த கும்பல் சிறிய தொகையை கடன் கொடுத்து, கூட்டுறவு வங்கியில் அதிக கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இப்பிரச்னை குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் போலீசார் புகாரை ஏற்காமல் இழுத்தடித்து வந்தனர். இவர்களால் ஏமாற்றப்பட்ட அனைத்து அப்பாவிகளின் புகாரை ஏற்று இந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கடன் விண்ணப்பங்களும் முறையாக உள்ளதா என ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை கோரி வரும் நாளை (31ம் தேதி,) ஊத்துக்குளியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

-- ஊத்துக்குளி ஸ்டேஷனில் புகார் அளித்தவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us