ADDED : ஏப் 15, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனித வெள்ளி, ஈஸ்டர் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப் பட்டுள்ளது.
வரும், 19ம் தேதி சென்னையில் இருந்து இரவு 11:20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம், 3:30க்கு கொல்லம் சென்று சேரும். திருப்பூருக்கு காலை, 6:10க்கு வரும். மறுமார்க்கமாக, 20ம் தேதி மாலை 7:10க்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11:10க்கு சென்னை சென்று சேரும். திருப்பூரை அதிகாலை, 3:15க்கு ரயில் கடக்கும்.
ஆறு முன்பதிவில்லா பொது பெட்டி, 12 படுக்கை வசதி பெட்டி உட்பட, 20 பெட்டிகளை கொண்டதாக இந்த ரயில் இருக்கும். டிக்கெட் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.