/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; பள்ளி தாளாளர் உட்பட 6 பேர் சரண்: திருப்பூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்
/
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; பள்ளி தாளாளர் உட்பட 6 பேர் சரண்: திருப்பூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; பள்ளி தாளாளர் உட்பட 6 பேர் சரண்: திருப்பூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்
சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; பள்ளி தாளாளர் உட்பட 6 பேர் சரண்: திருப்பூர் அருகே பட்டப்பகலில் பயங்கரம்
ADDED : ஜூலை 29, 2025 05:19 AM

திருப்பூர்; தாராபுரத்தில் சொத்து பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கோர்ட் அனுமதியுடன் இடத்தை அளக்க சென்ற சென்னை ஐகோர்ட் வக்கீல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் கூலிப்படையினர் என, ஆறு பேர் சரணடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், முத்து நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 41; சென்னை ஐகோர்ட் வக்கீல்.
இவருக்கும், இவரது சித்தப்பா தண்டபாணி குடும்பத்தினருக்கு இடையே பல ஆண்டுகளாக சொத்து பிரச்னை இருந்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் முருகானந்தத்தின் தந்தை லிங்கசாமியை, தண்டபாணி தரப்பினர் கொலை செய்தனர்.
இருதரப்புக்கு இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது.
தொடர்ந்து, வக்கீலான முருகானந்தம், சித்தப்பா தண்டபாணி நடத்தும் பள்ளி முறையான அனுமதியில்லாமல் பள்ளி கட்டடம் கட்டியது தொடர்பாக, பொதுநல வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, மூன்றாவது மாடியில் இருந்த வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே உள்ள இடம் தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கோர்ட் அனுமதியுடன் நேற்று அளவீடு செய்ய இருந்தனர். இதுதொடர்பாக, தண்டபாணியிடம் அளவீடு செய்வது குறித்து தெரியப்படுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இச்சூழலில், நேற்று மதியம், 2:45 மணிக்கு வக்கீல் முருகானந்தம், சர்வேயர் உட்பட சிலர் அந்த இடத்துக்கு சென்றனர். அங்கு வந்த கும்பல், முருகானந்தத்தை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பட்டப்பகலில் வக்கீலை வெட்டி கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய தாராபுரம் போலீசார், கொலை குறித்து விசாரித்தனர். இதில், தண்டபாணி தரப்பினர், வக்கீலை கொலை செய்தது தெரிந்தது.
போலீசார் கூறியதாவது:
தண்டபானிக்கு அடுத்தடுத்து தொல்லை கொடுத்து வந்ததால், பழி தீர்க்கும் வகையில் முருகானந்தம் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
கொலை தொடர்பாக, தண்டபாணி, 65, கூலிப்படையினரான, திருச்சியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 29, சேலத்தை சேர்ந்த ராம், 22, நாமக்கல்லை சேர்ந்த சுந்தரன், 26, திருச்சியை சேர்ந்த நாகராஜன், 29; மற்றும் தாராபுரத்தை சேர்ந்த நாட்டுதுரை, 65, என, ஆறு பேர் போலீசில் சரணடைந்தனர். கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.