/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சென்னை சில்க்ஸ் - எஸ்.சி.எம்., குழுமம் பள்ளிக்கு கட்டித்தந்த வகுப்பறைகள் திறப்பு

ADDED : ஜூன் 17, 2025 12:21 AM

திருப்பூர்; திருப்பூர், புதுராம கிருஷ்ணாபுரம் துவக்கப்பள்ளியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தி சென்னை சில்க்ஸ் - எஸ்.சி.எம்., குரூப் ஆப் கம்பெனீஸ் சார்பில், மூன்று புதிய வகுப்பறை கட்டடம் நன்கொடையாக கட்டி கொடுக்கப்பட்டது.
வகுப்பறைகள் திறப்பு விழா, நேற்று நடந்தது. எஸ்.சி.எம்., குழுமம் சேர்மன் நந்தகோபால், துணை மேயர் பாலசுப்ரமணியம், துணை கமிஷனர் சுந்தரராஜன், மண்டல தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் வகுப்பறைகளை திறந்து வைத்தனர். முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் மோகன் வரவேற்றார்.
திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் சியாமளா உட்பட பலர் பங்கேற்றனர்.