/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேற்று மாரியம்மன் பூச்சாட்டு விழா
/
சேற்று மாரியம்மன் பூச்சாட்டு விழா
ADDED : அக் 08, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; தெக்கலுாரில் உள்ள ஸ்ரீ சேற்று மாரியம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது.
கம்பம் சுற்றி ஆடுதல், பூவோடு எடுத்தல், காவடி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று அம்மன் அழைத்தல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வருதல், கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. தெக்கலுார் கிராம இளைஞர்கள் மற்றும் எம்.ஆர்.டெக்ஸ் நிறுவனத்தினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.