/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழிக்கழிச்சல் பிப்., 1ல் தடுப்பூசி
/
கோழிக்கழிச்சல் பிப்., 1ல் தடுப்பூசி
ADDED : ஜன 28, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: கால்நடைத்துறை சார்பில், ஆண்டுதோறும், பிப்., மாதம், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், இரண்டு வாரம் நடத்தப்படுகிறது. அதன்படி, வரும் பிப்., 1ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரை, மாவட்டத்தில் முகாம் நடக்க உள்ளது.
கால்நடை மருந்தகம், கிளை நிலையங்களில் பணியாற்றும் கால்நடை உதவி டாக்டர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் மூலமாக, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முகாமில், எட்டு வாரத்துக்கு மேற்பட்ட கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி, பயன்பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.