/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே நாளில் திருப்பூர் வருகை
/
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே நாளில் திருப்பூர் வருகை
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே நாளில் திருப்பூர் வருகை
முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே நாளில் திருப்பூர் வருகை
ADDED : ஜூன் 11, 2025 10:03 PM

திருப்பூர்; திருப்பூருக்கு ஒரே நாளில், முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வருகை தந்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் மகள் செந்தமிழ் - -யோகேஸ் கண்ணா திருமண வரவேற்பு விழா கோவை-- சேலம் பைபாஸ் சாலை, செங்கப்பள்ளியில் உள்ள சொர்ண மஹாலில் நேற்று காலை நடந்தது. இதில், பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். பின், கார் மூலம் மதியம், 12:20 மணியளவில் செங்கப்பள்ளியில் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றார். அமைச்சர்கள், தி.மு.க., மூத்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதல்வர் வருகையையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் இல்லத்துக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி நேற்று மாலை திருப்பூர் வந்தார். குணசேகரனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.