/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் வருகை ரத்து: தி.மு.க.,வினர் ஏமாற்றம்
/
முதல்வர் வருகை ரத்து: தி.மு.க.,வினர் ஏமாற்றம்
ADDED : ஜூலை 21, 2025 11:35 PM

திருப்பூர்; உடல்நலக்குறைவு காரணமாக, முதல்வர் ஸ்டாலின்திருப்பூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதால், தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது.
இன்று (22ம் தேதி) திருப்பூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் மற்றும் மருத்துவமனை வளாகம் திறப்பு விழாவிலும், பொதுமக்களைச் சந்திக்கும் வகையில், ரோடு ேஷாவிலும் கலந்து கொள்வதாக இருந்தது. அதே போல் நாளை உடுமலையிலும், பல நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக திருப்பூர் மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வரை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளும், அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அரசு துறை அதிகாரி களும் மேற்கொண்டிருந்தனர்.
திருப்பூர் நகரப்குதி முழுவதும் துாய்மைப்படுத்தப்பட்டு, ரோடுகள் சீரமைத்து, கால்வாய்கள் சுத்தம் செய்தும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்வரை வரவேற்க கட்சி கொடிகள் ரோட்டோரங்களில் நட்டும், வரவேற்பு பேனர்கள் அமைத்தும் கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
திடீரென முதல்வர் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனால் முதல்வர் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வருகை ரத்தானதால் திருப் பூர் மாவட்ட தி.மு.க.,வினர் ஏமாற்றம் அடைந்தனர்.