ADDED : பிப் 21, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ். அலகு- - 2 சார்பில் உலக சமூகநீதி தினத்தையொட்டி கல்லுாரி வளாகத்தில் விழிப்புணர்வு உரையும், மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பேராசிரியர் செங்கமுத்து முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். அலகு- - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் சிறப்புரையாற்றினார்.
பேராசிரியர் சக்திசெல்வம் வாழ்த்துரைவழங்கினார். மாணவ செயலர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் சமூக பாதுகாப்பு, சிறந்த பணி என்னும் மையக்கருத்தை வலியுறுத்திஉறுதிமொழி எடுத்து கொண்டனர்.
