/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை பிறப்பு பதிவு; டிச. 31 கடைசி நாள்
/
குழந்தை பிறப்பு பதிவு; டிச. 31 கடைசி நாள்
ADDED : செப் 25, 2024 12:17 AM
திருப்பூர் : குழந்தை பிறப்பு விவரங்களை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு பிறப்பு - இறப்பு பதிவு விதிகள் - 2000ன் படி, குழந்தை பிறந்த 15 ஆண்டுகளுக்குள் பிறப்பு சான்றில் பெயர் பதிவு செய்வது கட்டாயம். அதன்படி, கடந்த 2000ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதிக்கு முன் பிறந்தோர், பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம், வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 31ம் தேதிக்குப்பின், குழந்தை பிறப்பை 15 ஆண்டுகளுக்குள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்கிற நடைமுறை அமலுக்குவந்துவிடும். இதனால், 2009ம் ஆண்டு மற்றும் அதற்கு முன் பிறந்தோர், பெயர் பதிவு செய்ய இயலாமல்போகும்.
திருப்பூர் மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாதோர், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பதிவு செய்து, பிறப்பு சான்று பெற்றுக்கொள்ளவேண்டும். குழந்தையின் பெயர் பதிவு, ஓராண்டுக்குள் இலவசமாகவும், அதற்கு மேல் 200 ரூபாய் காலதாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். 2018-ம் ஆண்டு முதலான பிறப்பு - இறப்பு சான்றிதழை,crstn.orgஎன்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.