/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்; புதிய கட்டடம் கட்ட வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 10:00 PM
உடுமலை; உடுமலை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்துக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், அங்கன்வாடி மையங்கள் அரசால் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில்,உடுமலை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 138 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்கின்றனர்.
குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கென, உடுமலை, கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகரில், அரசு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டடம் மோசமான நிலையில் சிதிலமடைந்ததது.
இதனால், பணியாளர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த அலுவலகத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து,நகரப்பகுதியில் வாடகை கட்டடத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகம் மாற்றப்பட்டது.
அங்கன்வாடிகளின் செயல்பாடுகள், குழந்தைகளின் பராமரிப்பு, மற்றும் அரசு திட்டங்களை மையங்களில் செயல்படுத்துதல் குறித்து, பணியாளர்களுக்கு கூட்டம் நடத்தப்படுகிறது.
வாடகை கட்டத்தில் போதிய இடவசதி இல்லாததால், அங்கன்வாடி மையங்களில் தான் இத்தகைய கூட்டங்கள் நடக்கிறது.
மேலும், ஜீவா நகரில்அலுவலக கட்டடம் சிதிலமடைந்து, பல ஆண்டுகள் ஆகியும், புதிய கட்டடம் கட்டுவதில் தாமதமாகிறது.
இதனால் அலுவலக செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், மாதந்தோறும் வாடகைத் தொகையும் தேவையில்லாத செலவினமாக வீணாகிறது.
இதனால் சிதிலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்டுவதற்கு சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.