/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீர் தொட்டியில் குழந்தை பலி; போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு
/
தண்ணீர் தொட்டியில் குழந்தை பலி; போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு
தண்ணீர் தொட்டியில் குழந்தை பலி; போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு
தண்ணீர் தொட்டியில் குழந்தை பலி; போலீசாருக்கு தெரியாமல் புதைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:05 PM
உடுமலை; உடுமலை அருகே, தண்ணீர் தொட்டியில் விழுந்த இறந்த ஒன்றரை வயது குழந்தையை, போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் புதைத்த நிலையில், பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, சாமராயபட்டியை சேர்ந்த வீரகுமார்- மாரியம்மாள் தம்பதியரின் இரண்டாவது மகன், இனியன்.
ஒன்றரை வயதான இனியன், கடந்த, 29ம் தேதி, காலை விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள சீரங்கன் வீட்டிலுள்ள, சுமார், 6 அடி ஆழமுள்ள, நிலத்தொட்டியில், முழுவதும் நிரம்பியிருந்த தண்ணீரில் விழுந்து இறந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் போலீஸ், வி.ஏ.ஓ., என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், அருகிலுள்ள மயானத்தில் புதைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், குமரலிங்கம் போலீசில் வி.ஏ.ஓ., சிவக்குமார் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று காலை தாசில்தார் குணசேகரன் முன்னிலையில், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.