/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை கொலை வழக்கு; இளம்பெண்ணுக்கு சிறை
/
குழந்தை கொலை வழக்கு; இளம்பெண்ணுக்கு சிறை
ADDED : ஏப் 18, 2025 07:02 AM
திருப்பூர்; குண்டடத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவருக்கு மோகன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு குழந்தை பிறந்தது. கடந்த 2023ல் சிறுமி, மோகன்ராஜூடன் சேர்ந்து, மூன்று வயது குழந்தையை கொலை செய்தார். இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து குண்டடம் போலீசார் கைது செய்தனர். மோகன்ராஜ் மீதான வழக்கு விசாரணை திருப்பூர் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிறது.
சிறுமி மீதான வழக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இளஞ்சிறார் கோர்ட்டில் நடந்தது வந்தது. அதில், தற்போது, 22 வயதான அந்த இளம்பெண்ணுக்கு, ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரை மதுரையில் உள்ள பெண்கள் விடுதியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.