/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு அலகு 'வாட்ச்மேன்' பணிக்கு அழைப்பு
/
குழந்தைகள் பாதுகாப்பு அலகு 'வாட்ச்மேன்' பணிக்கு அழைப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலகு 'வாட்ச்மேன்' பணிக்கு அழைப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலகு 'வாட்ச்மேன்' பணிக்கு அழைப்பு
ADDED : அக் 26, 2024 11:04 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், 'வாட்ச்மேன்' பணியிடம், தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, வேலை அனுபவம் உள்ள, 21 முதல், 42 வயது வரையுள்ளவர் விண்ணப்பிக்கலாம். திட்டப்பணி என்பதால், இதன் வாயிலாக, அரசு பணி கோர முடியாது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், கல்விச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, அனுபவ சான்று நகல்கள் மற்றும் போட்டோவுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
வரும் நவ., 9ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தின், 7வது தளத்தில் உள்ள, குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0421 2971198 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். பணியிட விவரம் அறிய, https://tiruppur.nic.in என்ற இணையதள முகவரியை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.