/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்
/
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம்
ADDED : நவ 18, 2024 06:34 AM

திருப்பூர்; 'யங் இண்டியன்ஸ் - மாசூம்' குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புத்தகம், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
குழந்கைள் தினத்தையொட்டி, இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான 'யங் இண்டியன்ஸ் -மாசூம்' குழு சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது.
கடந்த, 11ம் தேதி, 'பெம்' பள்ளியில், 1098 என்ற எண்களில் 'சைல்டு ெஹல்ப் லைன்' தகவல் தொடர்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மொத்தம், 1098 மாணவ, மாணவியர்கள், 1098 என்ற எண்ணை போல் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கடந்த, 14ம் தேதி எப்.எம்., விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 15ம் தேதி, முருகம்பாளையம் காதுகேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம், மாவட்டத்தில் உள்ள, காப்பக குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
முருகம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயிற்சி ஆசிரியர்கள் வாயிலாக, சைகை முறையில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசு அங்கீகாரத்துடன் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள, 'மாசூம்' புத்தகம், அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து 'யங் இண்டியன்ஸ்' அமைப்பு தலைவர் நிரஞ்சன், 'மாசூம்' தலைவர் மேனகா ஆகியோர் கூறுகையில், 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாஷா வழிகாட்டுதலுடன், கடந்த ஓராண்டுக்கு மேலாக, வெள்ளிக்கிழமை தோறும், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை, 10 ஆயிரத்து, 138 குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.
கடந்த ஆறு நாட்களாக, பல்வேறு இடங்களில், 'டிஜிட்டல்' பாதுகாப்பு குறித்தும் விளக்கியிருக்கிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற, 'மாசூம்' புத்தகம், அனைவருக்கும் வழங்கியிருக்கிறோம். அதை படித்தாலே, அனைவரும் விழிப்புணர்வு பெறலாம்,' என்றனர்.