/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா பள்ளியில்'குழந்தைகள் திருவிழா'
/
விவேகானந்தா பள்ளியில்'குழந்தைகள் திருவிழா'
ADDED : பிப் 10, 2024 11:30 PM
திருப்பூர்:காங்கயம், காடையூரில் உள்ள விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி 23 ஏக்கர் பரப்பில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் செயல்படுகிறது.
இன்றைய சூழலில் நம் பாரம்பரியம், கலாசாரம் போன்ற வாழ்க்கையின் விழுமியங்களையும், அதன் மதிப்பையும் உணர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை ஒரு கடமையாக கருதியும், பரபரப்பாக இயங்கும் பெற்றோர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் விதமாகவும், அவர்கள் தங்கள் நேரத்தை தங்கள் குழந்தைகளுடன் செலவிடும் வகையிலும் ஒரு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அவ்வகையில், இன்று (11ம் தேதி), காலை முதல் பள்ளி வளாகத்தில், 'குழந்தைகள் திருவிழா' கொண்டாட்டம் நடக்கிறது. 3 முதல் 7 வயதுடைய குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பங்கேற்கலாம் என, பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.