/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 20, 2024 06:00 AM

திருப்பூர் : சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளிக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உடுமலை, அமராவதி நகர், கல்லாபுரத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 44. கூலித் தொழிலாளி. கடந்த, 2022ல், டவுன் பஸ்சில் பயணித்த போது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த, 12 வயது பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
புகாரின் பேரில் உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், போக்சோ குற்றத்துக்கு, 5 ஆண்டு சிறை; 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.