/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'
/
சீன மொபைல் போன் விற்பனை: வாலிபருக்கு 'கவனிப்பு'
ADDED : ஜன 25, 2024 06:17 AM
திருப்பூர் : திருப்பூரில், சீனா மொபைல் போனை விற்பனை செய்து ஏமாற்றியதாக கூறி, மும்பை வாலிபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 35 என்பவர், மொபைல் போன் வாங்க மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு சென்றார்.
கடையின் வெளியே நின்றிருந்த வடமாநில வாலிபர் ஒருவர், அவசர தேவைக்காக மொபைல் போனை விற்பனை செய்வதாக கூறினார். 8,500 ரூபாய் கொடுத்து வாங்கிய, சில நிமிடங்களில் போலியான சீனா மொபைல் போன் என்பது தெரிந்தது.
இதனால், மீண்டும் அங்கு வந்த ஹரிகிருஷ்ணன், வாலிபரிடம் இதுகுறித்து கேட்க முயன்றார். உடனே, வாலிபர் தப்பியோட, அவரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், மும்பையை சேர்ந்த அங்குஷ், 22 என்பது தெரிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.