/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னக்கரை ஓடையில் பாலம்மக்களுக்கு நீங்கியது அவலம்
/
சின்னக்கரை ஓடையில் பாலம்மக்களுக்கு நீங்கியது அவலம்
சின்னக்கரை ஓடையில் பாலம்மக்களுக்கு நீங்கியது அவலம்
சின்னக்கரை ஓடையில் பாலம்மக்களுக்கு நீங்கியது அவலம்
ADDED : ஜன 18, 2024 12:41 AM

திருப்பூர் : முருகம்பாளையம் அருகே, சின்னக்கரை ஓடை மீது உயர் மட்டப் பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.திருப்பூர் மாநகராட்சி, முருகம்பாளையம் பகுதியிலிருந்து கரைப்புதுார் ஊராட்சி, சின்னக்கரை செல்ல ரோடு உள்ளது.
இதில், சின்னக்கரை ஓடை கடந்து செல்கிறது. பல்லடம் வடக்கு பகுதியில் சேகரமாகும் மழை நீர் இந்த ஓடை வழியாக திருப்பூர் வந்து, நொய்யல் ஆற்றில் சேருகிறது. ஓடையில் முருகம்பாளையம் - கரைப்புதுார் இடைப்பட்ட பகுதியில் உயர் மட்டப் பாலம் இல்லாமல் இருந்தது.
இதனால், வாகனங்கள் ஓடைக்குள் அமைந்துள்ள தரைவழி மண் பாதை வழியாக மட்டுமே கடந்து செல்லும் நிலை இருந்தது.மழை நாட்களில் ஓடையில் நீர் பெருக்கெடுத்து வரும் போது இந்த வழியில் போக்குவரத்து முற்றிலும் தடைபடும். இதற்கு தீர்வு காணும் வகையில், ஓடையின் குறுக்கில் இந்த இடத்தில் உயர்மட்டப் பாலம் கட்ட பணி துவங்கியது. இது, 90 சதவீதம் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.இதனால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.