ADDED : பிப் 04, 2024 01:59 AM

'அப்பா... இவ்ளோ பெரிய புக்கா... எப்படி துாக்கறது'
சிறுவன் தந்தையிடம் கேட்கிறான்.
'அதை துாக்க முடியாதுடா' என்கிறார் தந்தை.
திருப்பூரில் வேலன் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில், புத்தகம் விரித்துவைத்தாற்போல் தத்ரூபமாக 'செட்' அமைக்கப்பட்டிருந்தது.
அதில், 'படி... படி... படி... எந்த மொழியும் படி' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. நுாற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகள், ஆயிரக்கணக்கான பதிப்பகங்களுடன், லட்சம் புத்தகங்கள் அரங்குகள் நிறைந்து காணப்பட்டது.
'அறிவை விரிவு செய்... எதையும் கேள்வி கேளுங்கள்' என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே தொங்கிய தோரணங்கள் இளைஞர்கள் உள்ளத்தை ஊக்கப்படுத்தியது.
ஆன்மீகம், அரசியல், கல்வி, ஜோதிடம், சினிமா, வரலாறு, சூழலியல், சமூக பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம், சிறார் இலக்கியம், சிறுகதை, நாவல், போட்டி தேர்வுகள், அறிவியல் என ஒவ்வொரு அரங்கிலும் அறிவை செதுக்க உளியாக புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன.