/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா
/
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா
ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா
ADDED : மே 11, 2025 12:55 AM
திருப்பூர்: சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் கோவிலில், 96ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, நாளை நடைபெற உள்ளது.
சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தர் கோவிலில், 96வது சித்ரா பவுர்ணமி விழா, நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, பவளக்கொடி கும்மி கலைக்குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று, மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையும், சித்ரகுப்தர் உற்சவர் சப்பரத்தில் திருவீதியுலா மற்றும் பால்குட ஊர்வலம் நடக்கிறது; தொடர்ந்து, பால் அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது.நாளை அதிகாலை, 4:30 மணி முதல், சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீசித்ரகுப்தர் யாகபூஜைகளும், மகா அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து, சித்ரகுப்தர் கதை வாசிப்பும், அன்னதானமும் நடைபெற உள்ளது.
நவக்கிரகளில், கேதுவின் அதிதேவதை சித்ரகுப்தர்; எனவே, ஜாதகத்தில் கேது திசை, கேது புத்தி நடப்பில் உள்ளவர்களும், சித்திரை மாதம் பிறந்தவர்களும் சிறப்பு வழிபாடு செய்து பயன்பெறலாம் என, கோவில் நிர்வாகிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.