/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த பள்ளி தேர்வு செய்வது அவசியம்
/
சிறந்த பள்ளி தேர்வு செய்வது அவசியம்
ADDED : பிப் 17, 2024 11:54 PM

திருப்பூர்:திருப்பூர் அருகே அவிநாசி - கோவை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப் பள்ளி தாளாளர் விநாயகம் கூறியதாவது:
தங்கள் குழந்தை கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவனாக வளர வேண்டும் என்பது தான் பெற்றோரின் எதிர்பார்ப்பு. இது முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், அதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்தித் தர வேண்டும். மழலையர் பள்ளி முதல் இதை முறையாகக் கண்டறிந்து தேர்வு செய்து கல்வி பயில வைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
சிறு குழந்தைகள் வீட்டிலிருந்த போது உணர்ந்த அதே சூழலை பள்ளியிலும் உணர வேண்டும். ஆசிரியர்கள் மற்றொரு தாயாக இருந்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். குறைந்த அளவு மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகள் தான் இதற்கு ஏற்றதாக அமையும்.குழந்தை வளர்ந்து அடுத்தடுத்த வகுப்புக்குச் செல்லும்போது, எந்த தடையும் வரக் கூடாது. தொடர்ந்து ஒரே பள்ளியில் பயில வேண்டும்.
ஒழுக்க நெறிகள் கற்று வளரும் குழந்தை தான் பிற்காலத்தில் சமூக பொறுப்புள்ள மனிதனாக உயரும். அறநெறிகள் கற்பிக்கும் பள்ளி அவசியம்.
நிர்வாகத் திறன் உள்ளிட்ட திறன்கள் முழுமையாக வழங்கும் பாடத் திட்டம் மிகவும் அவசியம். உரிய பாடத்திட்டம் உபகரணங்கள், பாதுகாப்பு வசதி கொண்ட உட்கட்டமைப்பு, விளையாட்டு திடல் போக்குவரத்து வசதி, அவசர கால உதவி போன்றவை ஒரு சிறந்த பள்ளிக்கு அவசியம்.
இது போன்ற சிறப்பான பள்ளியை தேர்வு செய்ய வேண்டிய அவசியத்தை பெற்றோர் அறிந்து அதன்படி தங்கள் குழந்தைகளை பள்ளியில் நல்ல கற்றல் சூழல் வழங்கும் வகையில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.